Oneplus Note 7 And Oneplus Note 7 Pro Releasing Date And Features Explained In Tamil
- NEWS CAM
- Apr 23, 2019
- 1 min read
Updated: Apr 24, 2019
ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட் போன் மே 14 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் சி.இ.ஓ பீட் லாவ், ‘வரும் செவ்வாய் கிழமை போன் ரிலீஸ் எப்போது என்பது குறித்து தெரிவிக்கப்படும்' என்றுள்ளார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரண்டு போன்கள் ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஆகும். இரண்டு போன்களிலும் மூன்று பின்புற கேமரா, பாப்-அப் செல்ஃபி கேமரா உள்ளிட்ட வசதிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 855 எஸ்.ஓ.சி-யால் இந்த போன்கள் பவரூட்டப்படும் எனத் தெரிகிறது. இந்த இரண்டு போன்கள் மட்டும் அல்லாமல் 5ஜி வேரியன்ட் போன் ஒன்றும் ரிலீஸ் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 7 வரிசை போன்கள் எப்போது வரும் என்பதை தான் செவ்வாய் கிழமை சொல்வதாக கம்பெனியின் சி.இ.ஓ பீட் லாவ் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
போனின் உட்கட்டமைப்பு அம்சங்கள் குறித்து இதுவரை நமக்குக் கிடைத்த தகவல்படி, டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே, 6.67 இன்ச் சூப்பர் ஆப்டிக் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 ப்ராசெஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வசதி, மூன்று ரியர் கேமரா செட்-அப், பாப் அப் செல்ஃபி வசதி, ஆண்ட்ராய்டு பைய் இயங்கு மென்பொருள், வயர்-லெஸ் இயர் பட்ஸ் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 7 போனில், 6.4 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ போனில் 6.64 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 4,000 எம்.ஏ.எச் பேட்டரி பவர் மற்றும் 30w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை ஒன்பிளஸ் 7 வரிசை போன்கள் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
Here The 7 : https://www.youtube.com/watch?v=ZD93jghTzH0

#Oneplus7#Oneplus7Pro
Kommentarer