'Animated Stickers!' - The Next Update in Whatsapp 2019 Explained In Tamil
- NEWS CAM
- Apr 23, 2019
- 1 min read
WhatsApp Emoji: வாட்ஸ்அப் நிறுவனம் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் வெப் பயன்பாட்டிற்கு ‘அனிமேட்டட் ஸ்டிக்கர்' அப்டேட்டை கொண்டு வரும் முயற்சியில் இருப்பதாக WABetaInfo தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் இந்த புதிய வசதி குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸ் அடுத்த சில மாதங்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஜிஃப் ஃபைல் என்பது ஒரு சில நோடிகளில் நின்றவிடும். ஆனால், அனிமேட்டட் ஸ்டிக்கர் என்பது தொடர்ந்து ப்ளே ஆகிக் கொண்டே இருக்கும். இதனால், இந்த ஃபைல் மக்கள் மத்தியில் பிரபலமடையும் எனப்படுகிறது.
ஸ்டிக்கர் பேக்ஸ் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் இந்த அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. மற்ற ஸ்டிக்கர்களை தரவிறக்கம் செய்வது போன்று, அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸையும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸ் போன்ற ஒரு விஷயத்தை வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த காலத்திலும் ஒரு முறை சோதனை செய்து வந்தது என்றும் தற்போது மீண்டும் அந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது என்றும் WABetaInfo கூறுகிறது. இந்த முறை இப்புதிய வசதி கண்டிப்பாக பயனர்களுக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது. பொதுவாக வாட்ஸ்அப் நிறுவனம், ஒரு வசதி அல்லது அப்டேட், ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ் தளத்துக்கு என்று தனியாக விடும். விடுபட்ட இன்னொரு தளத்துக்கு சில காலம் கழித்து அதே வசதி கொடுக்கப்படும். இந்த முறை வாட்ஸ்அப், அனைத்துத் தளங்களுக்கும் ஒரே நேரத்தில் இவ்வசதியை கொடுக்கும் எனப்படுகிறது.
இப்புதிய வசதி எப்போது வெளியாகும் என்பதில் தெளிவில்லை. ஆனால், அதிக காலம் எடுக்காது என்பது WABetaInfo-வின் கருத்து.

#Whatsapp#Update
Comentarios