top of page

Full Information About Redmi Y3 In Tamil




ரெட்மி Y3, இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது. இளைஞர்களை குறிவைத்து வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில், பல அட்டகாச அம்சங்கள் இருக்கின்றன. ரெட்மி 7 போனுடன் ரெட்மி Y3 இன்று நடந்த நிகழ்ச்சியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, வாட்டர் ட்ராப் டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா, ஆண்ட்ராய்டு பைய் மென்பொருள் உள்ளிட்ட வசதிகளை இந்த போன் பெற்றுள்ளது. விற்பனை தேதி, விலை, தள்ளுபடிகள் குறித்து பார்ப்போம்


ரெட்மி Y3 விலை மற்றும் தள்ளுபடிகள்:


ரெட்மி Y3-யின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் 9,999 ரூபாய்க்கு கிடைக்கும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் 11,999 ரூபாய்க்கு கிடைக்கும். போல்டு ரெட், எலிகன்ட் ப்ளூ, ப்ரைம பிளாக் உள்ளிட்ட வண்ணங்களில் ரெட்மி Y3 சந்தையில் கிடைக்கும். ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்க முடியும். அமேசான் தளம், Mi தளம் மற்றும் எம்.ஐ ஹோம் ஸ்டோர்களில் இந்த போனை வாங்கலாம். அறிமுக தள்ளுபடியாக, 1,120 ஜிபி 4ஜி ஏர்டெல் நிறுவன டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன. 


ரெட்மி Y3-யின் சிறப்பம்சங்கள்:


டூயல் நானோ சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9 பைய், 6.26 இன்ச் எச்.டி+ டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2.5டி கிளாஸ், கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு, ஆக்டோ-கோர் குவாலகம் ஸ்னாப்டிராகன் 632 எஸ்.ஓ.சி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் பெற்றிருக்கும். 

3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் வகைகளை இந்த போன் கொண்டுள்ளது.


கேமராவைப் பொறுத்தவரை 12 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 2 மெகா பிக்சல் இரண்டாவது கேமராவையும் ரெட்மி Y3, பின்புறத்தில் பெற்றிருக்கும். 

முன்பறுத்தில் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவை Y3 கொண்டிருக்கிறது.

32ஜிபி மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த போன் மூலம் பெறலாம். 512 ஜிபி வரை சேமிப்பு வசதியை அதிகரித்துக் கொள்ள முடியும். 


4ஜி VoLTE, Bluetooth v4.2, மைக்ரோ USB, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக், 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளையும் இந்த போன் பெற்றிருக்கிறது. 




 
 
 

Comments


Post: Blog2_Post

Chennai , Tamilnadu , India

  • Instagram
  • Facebook
  • YouTube

©2019 by NewsCam. Proudly created for you.

bottom of page