Moto Z4 Price And Feature In Tamil
- NEWS CAM
- May 31, 2019
- 1 min read
வியாழக்கிழமையன்று, தனது புதிய ஸ்மார்ட்போனான, மோட்டோ Z4-ஐ அறிமுகம் செய்துள்ளது. தற்போதைக்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது, மோடோ நிறுவனம். மற்ற Z- தொடர்கள் பொன்றில்லாமல், இந்த மோட்டோ Z4 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் நிறுவனத்தில் விற்பனையாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனின், விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளே!
மோட்டோ Z4: விலை!
499 டாலர்கள் (34,900 ரூபாய்) துவக்க விலையில் விற்பனையாகவுள்ள இந்த மோட்டோ Z4, 4GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. இந்த மோட்டோ Z4, சாம்பல் (Flash Grey) மற்றும் வெள்ளை (Frost White) வண்ணங்களில் விற்பனையாகவுள்ளது.
மோட்டோ Z4: சிறப்பம்சங்கள்!
அண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டு செயல்படும் மோட்டோ Z4 ஸ்மார்டபோனின் அமெரிக்க வெர்சனில், ஒரு நானோ சிம் வசதி மட்டுமே கொண்டுள்ளது. இருப்பினும், இதன் இந்திய மட்டும் சீன வெர்சன்கள் இரண்டு நானோ சிம் வசதியுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன், 6.40-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை, 19.5:9 என்ற அளவிலான திரை விகிதத்தை கொண்டுள்ளது.
4GB RAM கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பின்புற கேமரா மட்டுமே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 25 மெகாபிக்சல் அளவிலான முன்புற செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
3,600mAh பேட்டரி அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு, 15W டர்போ சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.இது டைப்-C சார்ஜ் போர்ட் கொண்டுள்ளது. 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v5.0 மற்றும் ஜிபிஎஸ் வசதிகளை கொண்டு வந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
コメント