top of page

Redmi Note 7s Full Specification , Releasing Date And Price And Vivo Z3X India Releasing Date


Vivo Z3x


இந்தியாவில் விவோ Z3x விலை ரூ. 15.999. விவோ Z3x வெளியீடு ஜூன் மாதம் 2019 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Redmi Note 7s


முன்னதாக சியோமி நிறுவனத்தின் அறிவிப்பின்படி, தனது அடுத்த ஸ்மார்ட்போனான 'ரெட்மீ நோட் 7S'-ஐ மே 20-ஆம் தேதி வெளியிடப்போவதாக கூறிப்பிட்டிருந்தது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனை, தனது யூடூப் மற்றும் இணையதளங்களில் நேரலையில் அறிமுகப்படுத்தினார், ரெட்மீயின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன்.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பற்றி கூறியுள்ள மனு ஜெய்ன், இந்த ஸ்மார்ட்போனில் பல சோதனைகளையும் மேற்கொண்டுள்ளார். இதன் கேமராக்களை சந்தையில் உள்ள, சில சிறந்த ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிட்டு, சிறந்த கேமரா வசதிகளை ரெட்மீ நோட் 7S கொண்டுள்ளது என்கிறார் சியோமி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.


'ரெட்மீ நோட் 7S': விலை மற்றும் விற்பனை!


இந்தியாவில் இந்த 'ரெட்மீ நோட் 7S' இரண்டு வகைகளில் வெளியாகவுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரு ஸ்மார்ட்போனும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்டு மற்றொரு ஸ்மார்ட்போனும், வெளியாகவுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 10,999 ரூபாய் மற்றும்  3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 12,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன்கள் மொத்தம் மூன்று வண்ணங்களில் வெளியாகவுள்ளது. கருப்பு (Onyx Black), ப்ளூ (Sapphire Blue) மற்றும் சிவப்பு (Ruby Red) என்ற மூன்ற வண்ணங்களை கொண்டு வெளியாகவுள்ளது.


'ரெட்மீ நோட் 7S' ஸ்மார்ட்போனின் விற்பனையை மே 23-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ள சியோமி நிறுவனம், Flipkart.com, Mi.com மற்றும் எம் ஐ ஹோம் ஸ்டோர்கள் ஆகியவற்றில் விற்பனைக்கு வரவுள்ளது.


'ரெட்மீ நோட் 7S': சிறப்பம்சங்கள்


இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட 'ரெட்மீ நோட் 7S' அண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டுள்ளது. 6.3 இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்), 19.5:9 திரை விகிதம், டாட் நாட்ச் டிஸ்ப்லே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின், இரு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டுள்ளது. 2.2GHz வேகம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆக்டா-கோர் குவல்கோம் ஸ்னேப்ட்ராகன் 660 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டு வெளியாகவுள்ளது. 


இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 5 மெகாபிக்சல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான கேமராவை கொண்டுள்ளது. இதில் போர்ட்ரைட் மோட்(Portrait mode) மற்றும் ஃபேஸ் அன்லாக்(Face unlock) வசதிகளும் உள்ளன.


32GB மற்றும் 64GB என இரு சேமிப்பு அளவுகளில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனில், 256GB வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம். 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஹெட்போன் ஜாக்கையும் கொண்டுள்ளது. டை-C சார்ஜர் போர்டுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன், 4,000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது 


 
 
 

Bình luận


Post: Blog2_Post

Chennai , Tamilnadu , India

  • Instagram
  • Facebook
  • YouTube

©2019 by NewsCam. Proudly created for you.

bottom of page