Samsung Galaxy M40 Unofficial Features In Tamil
- NEWS CAM
- Apr 26, 2019
- 1 min read
சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் போனாக வெளிவரவிருக்கிறது கேலக்ஸி M40. இந்த போனில் 5000 எம்.ஏ.எச் பேட்டரி, 128 ஜிபி சேமிப்பு வசதிகள் போன்றவை இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. அதேபோல M வரிசை போன்களில் இந்த போன்தான் முதன்முதலாக ஆண்ட்ராய்டு பைய் இயங்கு மென்பொருள் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. M வரிசையில் சாம்சங் இதுவரை கேலக்ஸி M10, M20 மற்றும் M30 உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது.
சாம்மொபைல் என்ற தளம் வெளியிட்டு தகவல்படி, சாம்சங் கேலக்ஸி M40-யில், 128 ஜிபி சேமிப்பு வசதி, ஆண்ட்ராய்டு பைஐ மென்பொருள், 5000 எம்.ஏ.எச் பேட்டரி வசதி, ஆமோலெட் டிஸ்ப்ளே, முன்று பின்புற கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வை-ஃபை அலையன்ஸ் இணையதளத்தில் M40 குறித்து சென்ற வாரம் முதன்முதலாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சாம்சங் நிறுவனம், M40 குறித்து எந்த வித தகவலையும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் M வரிசை போன்களை இந்திய சந்தைக்குக் கொண்டு வந்தது சாம்சங். கேலக்ஸி M10- 7,990 ரூபாய்க்கும், கேலக்ஸி M20- 10,999 ரூபாய்க்கும், கேலக்ஸி M30- 14,990 ரூபாய்க்கும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது சாம்சங். இதில் M30 மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

Comentários