Xiaomi Black Shark 2 Price And Features In Tamil
- NEWS CAM
- May 27, 2019
- 1 min read
பல பட்ஜெட் போன்களை தாண்டி சில ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது சியோமி நிறுவனம். அவைகளில் ஒன்று தான் இந்த 'ப்ளாக் ஷார்க்'. இந்த ஸ்மார்ட்போன் கேமிங்கிற்காகவே பிரத்யேகமாகவே தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 'ப்ளாக் ஷார்க் 2' என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது சியோமி நிறுவனம். மே 27 அன்று அறிமுகமாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஃப்ளிப்கார்ட்டில் வெளியாகவுள்ளது. இதை இன்ஸ்டாகிராமின் ஒரு விளம்பரத்தின் வாயிலாக உறுதி படுத்தியுள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். மேலும் அந்த விளம்பரத்தில் கூகுள் மற்றும் போகோ போன்கள் பற்றிய தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
'ப்ளாக் ஷார்க் 2': இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை
4 வகைகள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக கடந்த மார்ச் மாதம் சீனாவில் அறிமுகமானது. அதில் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' 3,199 யுவான் (32,300 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமானது. இதன் மற்ற வகைகளான 8GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' விலை 3,499 யுவான்கள் (35,300 ரூபாய்) எனவும், 8GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' விலை 3,799 யுவான்கள் (38,300 ரூபாய்) எனவும் விற்பனை ஆனது.மேலும், மற்றொரு வகையான 12GB RAM + 256GB சேமி ப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2'-வின் விலை 4,199 யுவான்கள் (42,400 ரூபாய்). கருப்பு (Shadow Black) மற்றும் சில்வர் (Frozen Silver) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது.)
ப்ளாக் ஷார்க் 2': சிறப்பம்சங்கள்
இரண்டு சிம் வசதிகளை கொண்ட இந்த 'ப்ளாக் ஷார்க் 2' 6.39-இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் மற்றும் 403ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் லிக்விட் கூல் 3.0 (Liquid Cool 3.0) தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதனால், மற்ற ஸ்மார்ட்போன்களை விட, இதில் வெப்பத்தை வெளிக்கடத்தும் திறன் 20 மடங்கு வரை அதிகமாக இருக்கும்.
கேமரா பற்றி பேசுகையில், இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த 'ப்ளாக் ஷார்க் 2'. 48 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த கேமராக்கள். மேலும், 20 மெகாபிக்சல் அளவிலான முன்புற கேமராவை கொண்டுள்ளது.
4,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும், 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
Comentários